வடலூரில் ஜனநாயக மாதர் சங்க கூட்டம்
வடலூரில் ஜனநாயக மாதர் சங்க கூட்டம் நடைபெற்றது.
வடலூர்,
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட குழு கூட்டம் வடலூரில் நடைபெற்றது. இதற்கு மாநில செயற்குழு உறுப்பினர் சீத்தா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மேரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டசெயலாளர் மாதவி, மாவட்ட தலைவர் மல்லிகா, மாவட்ட துணைத்தலைவர் தேன்மொழி, துணை செயலாளர் அன்புசெல்வி, குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் ரேவதி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் விஷக்கடி, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை, 24 மணி நேரமும் இருப்பு வைக்க வேண்டும், வடலூரில் ரெயில்வே கேட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி, நிறுவனங்களில், பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.