நத்தக்காடையூர் அருகேநொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த தற்காலிக தரைப்பாலம் இடித்து அகற்றம்


நத்தக்காடையூர் அருகேநொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த தற்காலிக தரைப்பாலம் இடித்து அகற்றம்
x

நத்தக்காடையூர் அருகேநொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த தற்காலிக தரைப்பாலம் இடித்து அகற்றம்

திருப்பூர்

முத்தூர்


நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த தற்காலிக தரைப்பாலம் பொதுப்பணித்துறை மூலம் இடித்து அகற்றப்பட்டது.

நொய்யல் ஆறு

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள செங்குளம் - பழைய கோட்டையில் நொய்யல் ஆறு செல்கிறது. திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையை இணைக்கும் இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே இருந்த சுமார் 100 ஆண்டுகள் பழமையான மேம்பாலம் மிகவும் அகலம் குறுகலாக இருந்து வந்ததால் கனரக வாகன போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

இதனால் தமிழக அரசு பொதுப்பணித்துறை மூலம் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் புதிய மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. அப்போது அங்கு இருந்த பழமையான மேம்பாலம் இடிக்கப்பட்டதால் வாகன போக்குவரத்து இடையூறு இல்லாமல் நடைபெற தாழ்வான தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. மேலும் அப்போதைய காலகட்டத்தில் நொய்யல் ஆற்றில் மழைநீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 2 முறை தற்காலிக தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மழைநீர் வெள்ளப்பெருக்கு

அதன் பின்பு மீண்டும் சிமெண்ட் குழாய்கள் கீழே பதிக்கப்பட்டு உயரமான தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி நிறைவு பெற்று கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வாகன போக்குவரத்து பயன்பாட்டிற்கு வந்த நிலையில் இப்பகுதியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தற்காலிக தரைப்பாலம் அகற்றப்படாமல் இருந்து வந்தது. மேலும் நொய்யல் ஆற்றில் மழைநீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழலில் தற்காலிக தரைப்பாலத்தில் நடுவில் தண்ணீர் தேங்கி உடைப்பு வழியாகவும், மேலே எழும்பியும் சென்று வந்தது.

இதனால் மழைக்காலங்களில் நொய்யல் ஆற்றில் சீரான நீரோட்டம் பாதிக்கப்படுவதாக எழுந்த புகாரை ஏற்று கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இங்கே இருந்த தற்காலிக தரைப்பாலம் பொதுப்பணித்துறை மூலம் இடிக்கப்பட்டது. ஆனால் இங்கு தற்காலிக தரைப்பாலம் முற்றிலும் இடித்து அகற்றப்படாமல் பாதி அளவு மட்டுமே பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. மேலும் மீதம் உள்ள பாதி தற்காலிக தரைப்பாலம் நொய்யல் ஆற்றின் குறுக்கே சீமை கருவேல மரங்களால் சூழ்ந்து காணப்பட்டது.

இந்த நிலையில் நொய்யல் ஆற்றில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 2 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் மழை நீர் அதிக அளவு சென்ற சூழலில் முற்றிலும் இடித்து அகற்றப்படாத தற்காலிக தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கி இரைச்சலுடன் மேலே எழும்பி தொடர்ந்து சென்று வந்தது. மேலும் நொய்யல் ஆற்றில் மழைநீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் கால கட்டத்தில் தண்ணீர் தேங்கி அருகில் உள்ள கிராம பகுதி மற்றும் சாலைகளில் புகுந்து தேங்கி மூழ்கடித்து செல்லும் அபாய சூழல் நிலவி வந்தது. இதுபற்றி தினத்தந்தி நாளிதழில் கடந்த மாதம் செய்தி பிரசுரிக்கப்பட்டது.

துரித நடவடிக்கை

இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் படி காங்கயம் கோட்டம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு தற்போது செங்குளம் - பழைய கோட்டையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே பாதி இடித்து அகற்றப்படாத நிலையில் உள்ள தற்காலிக தரைப்பாலத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றி உள்ளனர். இதனால் நொய்யல் ஆற்றில் இனிவரும் காலங்களில் மழைநீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இப்பகுதியில் தண்ணீர் தேங்காமல் சீரான நீரோட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளது.



Next Story