பொக்லைன் மூலம் கட்டிடங்கள் அகற்றம்
பாளையங்கோட்டை மார்க்கெட்டில் பொக்லைன் மூலம் கட்டிடங்கள் அகற்றப்பட்டன.
திருநெல்வேலி
நெல்லை பாளையங்கோட்டை காந்திமார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்படுகிறது. இதையொட்டி அங்கிருந்த 538 கடைகளை காலிசெய்யுமாறு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதற்காக அருகில் உள்ள பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் 178 தற்காலிக கடைகளும், பழைய போலீஸ் குடியிருப்பில் 373 தற்காலிக கடைகளும் அமைத்து கொடுக்கப்பட்டன. இதையொட்டி கடந்த மாதம் கடைகளை இடிக்கும் பணி தொடங்கியது. நேற்று காலையில் கட்டிடங்கள் இடிக்கும் பணி மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் நடந்தது. பொக்லைன் எந்திரங்கள் மூலம் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. அவைகள் உடனுக்குடன் லாரிகள் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து கட்டிடங்கள் இடிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
Related Tags :
Next Story