பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இடிப்பு
பாளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இடிக்கப்பட்டது.
திருவண்ணாமலை
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே உள்ள பாளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் பூவாடை அம்மன் கோவில் அருகே பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பயன்படாத நிலையில் பல ஆண்டுகளாக இருந்து வந்தது.
இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் பிரசுரமானது.
இதையடுத்து மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
விரைவில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இடிக்க காரணமாக தினத்தந்திக்கு பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story