பழுதடைந்த கட்டிடம் இடிப்பு


பழுதடைந்த கட்டிடம் இடிப்பு
x

கழிஞ்சூரில் பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது.

வேலூர்

காட்பாடி

காட்பாடி தாலுகா கழிஞ்சூர் கிராமத்தில் இ.பி.காலனி உள்ளது. இந்த பகுதிக்கு செல்லும் வழியில் இடது பக்கத்தில் கட்டிடம் கட்டப்பட்டு அதில் கடைகள் இருந்தன.

பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த கடைகள் எல்லாம் காலி செய்யப்பட்டு அதிலிருந்த கதவு, ஜன்னல்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

இதனால் அந்தக் கட்டிடம் பழுதடைந்து, பாழடைந்த நிலையில் காணப்பட்டது.

இந்த இடத்தில் சமூக விரோத செயல் நடைபெறுவதாக அந்த பகுதி மக்கள் கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த பாழடைந்த கட்டிடத்தை இடிக்க காட்பாடி தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் தாசில்தார் ஜெகதீஸ்வரன் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் கொண்டு இன்று அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது.


Next Story