நீரின் திசையை மாற்ற எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு வெடி வைத்து தகர்ப்பு
திருவெண்ணெய்நல்லூர் அருகே நீரின் திசையை மாற்ற எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு வெடி வைத்து தகர்க்கப்பட்டு ஜேசிபி இயந்திரம் மூலம் உடைக்கப்பட்டுள்ளது.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே நீரின் திசையை மாற்ற எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு வெடி வைத்து தகர்க்கப்பட்டு ஜேசிபி இயந்திரம் மூலம் உடைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எல்லீஸ் தடுப்பணை அமைந்துள்ளது. இந்த அணைக்கட்டின் 4 மதகுகளும் கனமழையால் உடைந்தது. இந்நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாகவும், அதிகரித்துள்ள நீர்வரத்து காரணமாகவும், கரையோரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும் நிலை வந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் அப்பகுதியை ஆய்வு செய்தார்.
மேலும், கரைப்பகுதியை பாதுகாத்திடும் வகையில் பாறாங்கற்களை கொண்டு கரைகளை பலப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தென்பெண்ணை ஆற்றில் வரக்கூடிய தண்ணீர் கரையோரமாக வருவதால், ஆற்றின் நடுப்பகுதியில் செல்வதற்காக தடுப்பணையின் நடுப்பகுதியை வெடிமருந்து வைத்து உடைத்து ஜேசிபி இயந்திரத்தால் அப்புறப்படுத்தினர்