ரெயில்வே மேம்பாலம் கட்டும் பகுதியில் வீடுகள், கடை அகற்றம்


ரெயில்வே மேம்பாலம் கட்டும் பகுதியில் வீடுகள், கடை அகற்றம்
x

ஜோலார்பேட்டை அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டும் பகுதியில் வீடுகள் மற்றும் கடை அகற்றப்பட்டது.

திருப்பத்தூர்

வீடுகள் அகற்றம்

நாட்டறம்பள்ளி தாலுகா சோமநாயக்கன்பட்டி ரெயில்வே கேட் அருகே ரூ.18 கோடி மதிப்பீட்டில் புதிய ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மேம்பாலம் கட்டும் பகுதியில் வீடு கட்டியுள்ள கிருஷ்ணமூர்த்தி, பரிமளா, அம்சவேணி, மகாலட்சுமி உள்ளிட்டோரின் வீடுகளுக்கும், கடை கட்டியுள்ளவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஏற்கனவே தேவைக்கு ஏற்ப வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் நேற்று மீதமுள்ள வீடுகளை அகற்றும் பணி நடந்தது. அப்போது அம்சவேணி, நாகராஜ் ஆகியோரது வீட்டையும், சஞ்சீவி என்பவருக்கு சொந்தமான கடையையும் அகற்ற நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வந்தனர்.

கால அவகாசம்

அப்போது 2 வீடுகள், ஒரு கடையை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். மகாலட்சுமி, ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் பொருட்களை அப்புறப்படுத்த 2 நாள் கால அவகாசம் கேட்டதால் அவர்களுக்கு 2 நாள் கால அவகாசமும், கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கடையில் உள்ள பொருட்களை அகற்ற ஒரு நாள் கால அவகாசமும் வழங்கப்பட்டது.

இந்த பணியில் உதவி கோட்ட பொறியாளர் அண்ணாமலை, உதவி பொறியாளர் பவ்யா, மண்டல துணை தாசில்தார் நடராஜன் கிராம நிர்வாக அலுவலர் அருண,ா நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோர் ஈடுபட்டனர்.


Next Story