பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றம்


பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றம்
x


பழனி பஸ் நிலையத்தில் பழைய கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி நடைபெற்ற காட்சி.


தினத்தந்தி 6 May 2023 12:30 AM IST (Updated: 6 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பழனி பஸ் நிலையத்தில் புதிதாக கட்டுமான பணிகள் தொடங்கவுள்ள நிலையில் பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

திண்டுக்கல்


பழனி நகராட்சியின் கீழ் வ.உ.சி. பஸ்நிலையம், காந்தி மார்க்கெட் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மார்க்கெட் கட்டிடம் மற்றும் பஸ்நிலையத்தில் டவுன் பஸ்கள் நிற்கும் நடைமேடை, அங்குள்ள கடைகள் சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து அவற்றை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட நகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக அங்குள்ள கடைக்காரர்களுக்கு மாற்று கடைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி மார்க்கெட் கடைக்காரர்களுக்கு உழவர்சந்தை அருகே தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டன.

அதேபோல் பஸ்நிலைய கடைக்காரர்களுக்கு பஸ்நிலையத்தின் கிழக்கு பகுதியில் உள்ள காலியிடத்தில் கடைகள் வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் இடிக்கப்பட உள்ள பஸ்நிலைய கட்டிட பகுதியில் பொதுமக்கள், பயணிகள் செல்லாதபடி அடைக்கப்பட்டது. பின்னர் பஸ்நிலைய மேற்கூரையில் உள்ள ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுகள் முதற்கட்டமாக அகற்றப்பட்டது. இந்நிலையில் பஸ்நிலையத்தின் பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது.

இடித்து அகற்றம்

இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, வாகன நிறுத்தம், கழிப்பறை என அனைத்து வசதிகளுடன் ரூ.11 கோடியே 32 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. அதேபோல் டவுன் பஸ்கள் நிற்கும் பகுதியில் கடைகள், நடைமேடை என ரூ.3 கோடியே 42 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. அதற்காக பழைய கட்டிடங்கள் இடித்தும் அகற்றும் பணி தொடங்கி உள்ளது என்றார்.



Next Story