திருவட்டார் பஸ் நிலையத்தில் பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கியது


திருவட்டார் பஸ் நிலையத்தில் பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கியது
x

திருவட்டார் பஸ் நிலையம் ரூ.2½ கோடியில் நவீன மயமாக்கப்படுகிறது. இதையொட்டி பஸ் நிலையத்தில் பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கியது. இதனால் நேரக்குறிப்பாளர் அறை மீன்சந்தை அருகே மாற்றப்பட்டது.

கன்னியாகுமரி

திருவட்டார்,

திருவட்டார் பஸ் நிலையம் ரூ.2½ கோடியில் நவீன மயமாக்கப்படுகிறது. இதையொட்டி பஸ் நிலையத்தில் பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கியது. இதனால் நேரக்குறிப்பாளர் அறை மீன்சந்தை அருகே மாற்றப்பட்டது.

பஸ் நிலையம்

திருவட்டார் பஸ் நிலையத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் இருந்தன. மேலும் பழைய கட்டிடங்களை இடித்து அகற்றி விட்டு நவீன முறையில் பஸ் நிலையம் கட்டவேண்டும் என திருவட்டார் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்த பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2.55 கோடி செலவில் பஸ் நிலையம் நவீன முறையில் கட்டப்படுகிறது. இதற்காக இங்கிருந்த கடைகள் அகற்றப்பட்டன. இதையடுத்து நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணி தொடங்கியது.

நேரகுறிப்பாளர் அறை

இதனால் பஸ்கள் பஸ் நிலையத்தின் வெளியே நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது. மேலும் பஸ் நிலையத்தில் செயல்பட்ட நேரக்குறிப்பாளர் அலுவலகம் சற்று தொலைவில் உள்ள மீன் சந்தை அருகில் மாற்றப்பட்டுள்ளது. இங்கு சென்று பஸ்கள் வரும் நேரத்தை பயணிகள் அறிந்து கொள்ளலாம். மேலும் அந்த பகுதியில் தற்காலிக பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணியும் தொடங்கியுள்ளது.

கடைகள் முழுமையாக இடித்து அகற்றிய பின்னர் பஸ் நிலைய வேலைகள் தொடங்கும் என பேரூராட்சி செயல் அலுவலர் கூறினார். தற்போது பஸ்கள் பஸ் நிலையத்தின் முன் பகுதியில் நின்று செல்வதால் அங்கு போக்குவரத்து நெருக்கடி அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே பஸ் நிலைய பணிகளை விரைவில் ெதாடங்கி முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story