பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிப்பு
தினத்தந்தி செய்தி எதிரொலியாக பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை
வாலாஜாபேட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி நுழைவு வாயில் பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடம் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து உடனடியாக அமைச்சர் ஆர்.காந்தி பள்ளி கட்டிடத்தை நேரில் பார்வையிட்டார். கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, நகராட்சி ஆணையாளர் குமரி மன்னன், நகராட்சி துணைத்தலைவர் கமல ராகவன், என்ஜினீயர் சரவணன் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
வகுப்பறை கட்டிடம் அமைச்சர் முன்னிலையில், பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
Related Tags :
Next Story