நாகர்கோவிலில் ரவுண்டானா பணிக்காக கடைகள் இடித்து அகற்றம்


நாகர்கோவிலில் ரவுண்டானா பணிக்காக கடைகள் இடித்து அகற்றம்
x

நாகர்கோவிலில் ரவுண்டானா பணிக்காக கடைகள் இடித்து அகற்றப்பட்டன.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் ரவுண்டானா பணிக்காக கடைகள் இடித்து அகற்றப்பட்டன.

கடைகள் அகற்றம்

கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வந்தது. மணல் தட்டுப்பாடு காரணமாக இந்த பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணியின் ஒரு கட்டமாக நாகர்கோவில் அப்டா மார்க்கெட் அருகே நான்கு வழிச்சாலையில் ரவுண்டானா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அந்த பகுதியில் உள்ள இடத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தும் வகையில் அங்குள்ள கடைகளை அகற்றுவது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த கடைகளை இடித்து அகற்றும் பணி நடந்தது. அப்போது 7 கடைகள் இடிக்கப்பட்டன. இதில் 2 கடைகளுக்கு கடைக்காரர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story