ஓசூரில்கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி
ஓசூர்,
ஓசூரில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணை செயலாளர் கலாவதி கலந்து கொண்டு பேசினார். மற்றும் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் வாசுதேவன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் உள்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வுதியம் வழங்க வேண்டும். நல வாரியத்தில் நோடிப் பதிவை அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சங்க நிர்வாகிகள், கட்டுமான தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story