கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் உபேத் தலைமை தாங்கினார். இதில் மாநில குழு உறுப்பினர் கண்ணு, மாவட்ட தலைவர் சிவராஜ், மாவட்ட செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூரில் இளம்பெண்கள் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தேன்கனிக்கோட்டை

இதேபோன்று தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் லகுமைய்யா, பகுதி செயலாளர் பூதட்டியப்பா, மாவட்ட கவுன்சிலர் பழனி, நாகராஜ், சலாம் பேக், கெம்பன், வீரப்பா, ஜெயந்த், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பா.ஜ.க. அரசை கண்டித்தும், மணிப்பூரில் பெண்களை பாலியல் சித்ரவதை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story