கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

விலைவாசி உயர்வுமற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் விலைவாசி உயர்வு, சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் தலைமை தாங்கினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ஹரி கோட்டீஸ்வரன், மகளிர் அணித் தலைவி விமலா உள்பட பலர் பங்கேற்றனர்.

அதே போல், குந்தாரப்பள்ளியில் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில், மாவட்ட பொதுச்செயலாளர் அன்பரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காவேரிப்பட்டணம் ஒன்றியம் மருதேரி ஊராட்சி பேருஅள்ளியில், மாவட்ட பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது..

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை கோட்டை வாசலில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் வெங்கட் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மணி, மாவட்ட செயலாளர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிளை தலைவர் சீனிவாசன், நகர பொதுச்செயலாளர்கள் விஜயகுமார், பிரகாஷ், நகர பொருளாளர் சரவணன், மாவட்ட மீனவர் அணி தலைவர் சீனிவாசன், இளைஞர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் பிரபு, முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் ரங்கநாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் கோதண்டராமன், ராஜேந்திரன், கோவிந்தராஜ், ராஜேந்திரன், சுதீர், பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓசூர்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஓசூரில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓசூர் மின்வாரிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட துணைத்தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் பிரவீண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று 35-வது வார்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில வர்த்தக பிரிவு துணைத்தலைவர் சுதா நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் முனிராஜூ, முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் சீனிவாசலு, நிர்வாகிகள் மஞ்சுநாத், அம்மன் சுரேஷ், மஞ்சு, கிரீஷ், இளவரசன், தமிழ்செல்வன், தேவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓசூர் தெற்கு மண்டலம் 43-வது வார்டு சார்பில், ஓசூர் அரசு ஐ.டி.ஐ. முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மண்டல தலைவர் நாகு என்ற கே.நாகேந்திரா தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் சிவராஜ், சரவணன், வெங்கட்ராமன், முனிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கர்னூர்-பர்கூர்

ஓசூர் மாநகராட்சி 37-வது வார்டு டி.வி.எஸ். நகர் பஸ் நிறுத்தம் அருகில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு மண்டல துணைத்தலைவர் விருபாஷா தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் சம்பத், சிவாஜி, நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மாநகராட்சி 44-வது வார்டுக்கு உட்பட்ட கர்னூரில் மாவட்ட பொருளாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மீனவரணி மாவட்ட துணை தலைவர் எல்லேஷ், இளைஞரணி மண்டல துணைத்தலைவர் வீரேந்திரா, ரகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பர்கூர் பஸ் நிலையம் அருகில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சிவப்பிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்தில், அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் 1,000 ரூபாய் வழங்க வேண்டும். போதைப்பொருள் மற்றும் சாராய விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட வேண்டும்.

இந்து கோவில்களை இடிக்க கூடாது. டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். அனைத்து விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த வேண்டும். மின்கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story