ஓசூரில்எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஓசூர்
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் மாநில நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியதாக கண்டனம் தெரிவித்து ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய நகராட்சி அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஷாநவாஸ் தலைமை தாங்கினார். சமூக ஊடக அணியின் வேலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஷபீர் அகமத் வரவேற்றார். மாவட்ட பொது செயலாளர் ஷபியுல்லாஹ், மாவட்ட செயலாளர் ஜாவித், மனிதநேய ஜனநாயக கட்சியின் ஓசூர் ஒன்றிய செயலாளர் பாஷா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், மாவட்ட பொருளாளர் அப்துல் கலீம், மருத்துவ அணி மாவட்ட தலைவர். முகமது பாரூக், சமூக ஊடக அணி மாவட்ட செயலாளர்.நூர் அஹ்மத், நகர தலைவர் சபி, மற்றும நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். முடிவில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இம்ரான் நன்றி கூறினார்.