ஓசூர், வேப்பனப்பள்ளியில்காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
ஓசூர்
ஓசூர், வேப்பனப்பள்ளியில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஓசூரில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மாதேஷ் என்ற மகாதேவன், மாநகர தலைவர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில், மாநகராட்சி கவுன்சிலர் இந்திராணி, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா, மாவட்ட துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ், மாவட்ட ஓ.பி.சி. அணி நிர்வாகி குமார் மற்றும் ஐ.என்.டி.யு.சி. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
வேப்பனப்பள்ளி
இதேபோன்று வேப்பனப்பள்ளியில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திம்மப்பா தலைமை தாங்கினார். இதில் வட்டார காங்கிரஸ் தலைவர் நாகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் முருகன், மூர்த்தி, பதி, பழனி, ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் குப்பம் பஸ் நிலையத்தில் இருந்து காந்தி சிலை வரை கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்று மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.