மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துசேலத்தில் அகில இந்திய மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துசேலத்தில் அகில இந்திய மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
சேலம்

சேலம்

மணிப்பூரில் பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், அதை தடுக்க தவறிய பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் பதவி விலகக்கோரியும் சேலத்தில் அகில இந்திய மாணவர் கழகம் மற்றும் புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக்குழு நிர்வாகி ராகுல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கர்ணன், தமிழ்மணி, அன்பரசன், மணிஸ்வரன் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றவர்களை தூக்கில் போட வேண்டும். மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய பா.ஜ.க. அரசு பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story