ஆர்ப்பாட்டம்

ஆதி தமிழர் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு விருதுநகர் மேற்கு மாவட்ட ஆதி தமிழர் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளர் சுப்பையா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பழனி முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் நாகராஜன், மாநில பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப்பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது அருந்ததியர் உள் ஒதுக்கீடு இட ஒதுக்கீட்டை 3 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்த்த வேண்டும். அருந்ததியர் சமுதாயத்தினருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். சிவகாசி பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முடிவில் ஒன்றிய செயலாளர் பாண்டித்துரை நன்றி கூறினார்.
Related Tags :
Next Story