நல்லம்பள்ளி தாலுகா அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நல்லம்பள்ளி தாலுகா அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், மாதையன், ஒன்றிய பொருளாளர் மல்லையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் பிரதாபன், மாவட்ட தலைவர் மாதையன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர். இதில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அட்டை பெற்ற குடும்பத்திற்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும். நல்லம்பள்ளியை மையமாக கொண்டு நகர பஸ்கள் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் மாவட்ட துணை செயலாளர் பச்சாகவுண்டர், மாவட்ட துணைத்தலைவர் ராஜகோபால் உட்பட சங்க நிர்வாகிகள், பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.