தர்மபுரியில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில்  தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

தர்மபுரியில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் பணிபுரிந்த பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட பணியாளர்கள் அமைப்பின் மாவட்ட தலைவர் அம்பிகா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மாதம்மாள், ரேணுகா தேவி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலாவதி, சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் நாகராஜன், மாவட்ட பொருளாளர் தெய்வானை ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

அப்போது தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் பணிபுரிந்த பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேறு துறைகளில் அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story