மத்திய அரசை கண்டித்து கிருஷ்ணகிரி, ஓசூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து  கிருஷ்ணகிரி, ஓசூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x

மத்திய அரசை கண்டித்து கிருஷ்ணகிரி, ஓசூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

மத்திய அரசை கண்டித்து கிருஷ்ணகிரி, ஓசூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி தலைமை தபால் நிலையம் எதிரில், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் வக்கீல் காசிலிங்கம், நாஞ்சில் ஜேசுதுரை, அக.கிருஷ்ணமூர்த்தி, நாராயணமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் லலித்ஆண்டனி வரவேற்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊத்தங்கரை முன்னாள் தலைவர் ஆறுமுகம், எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாநில நிர்வாகி ஆறுமுக சுப்பிரமணி, நகர்மன்ற உறுப்பினர் விநாயகம், மாவட்ட துணைத்தலைவர் ரகமத்துல்லா, முன்னாள் நகர தலைவர் வின்செண்ட், விவசாய அணி தலைவர்சூர்யகணேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல், குட்டி என்கிற விஜயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பழி வாங்கும் நடவடிக்கையாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்க துறை விசாரணை நடத்துவதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஓசூர்

இதேபோன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் அன்வர், வீர.முனிராஜ்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாவட்ட பொருளாளர் மகாதேவன், துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயல் தலைவர் அசேன், ஓய்வுபெற்ற உதவி கலெக்டர் பிரபாகரன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி அப்துர் ரகுமான், முன்னாள் நகர தலைவர் தியாகராஜன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா, மஞ்சுளா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.


Next Story