தர்மபுரியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x

தர்மபுரியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அமலாக்கத் துறையின் மூலம் சட்டவிரோதமாக ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் தலைமை தாங்கினார். நகர தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் பாலகிருஷ்ணன், இளங்கோவன் மற்றும் நிர்வாககிகள் முன்னிலை வகித்தனர். கர்நாடக மாநில முன்னாள் செயலாளர் ராமலிங்கய்யா கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். ராகுல்காந்தி மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும், அமலாக்கத்துறை மூலம் காங்கிரஸ் தலைவர்களை பழிவாங்கும் மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் நரேந்திரன், வடிவேல், ஜெய்சங்கர், வேடியப்பன், சேகர், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் காளியம்மாள், ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகிகள் சென்னகேசவன், தங்கவேல் லிட்டர் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.


Next Story