மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
பேட்டை:
பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முகம்மது நபியை அவதூறாக பேசிய நுபுர்சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. கம்னியூஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தென் மண்டல அமைப்பாளர் நைனா முகமது கடாபி, தமிழ்புலிகள் மாவட்ட செயலாளர் நெல்லை தமிழரசு, ம.தி.மு.க. கோல்டன் கான், திராவிட தமிழர் கட்சி திருக்குமரன், தமிழ் உரிமை மீட்பு களம் லெனின் கென்னடி, ரகுமான் பேட்டை மக்கள் நல அமைப்பு சேவத்தா காயிதே மில்லத், விளையாட்டு திடல் செயலாளர் முகமது அசனார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். மனிதநேய ஜனநாயக கட்சி நகர செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story