காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அக்னிபத் திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி உள்பட 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி:
அக்னிபத் திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி உள்பட 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசின் அக்னிபத் ராணுவ ஆள்சேர்ப்பு சட்டத்தை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். நகர தலைவர் லலித்ஆண்டனி வரவேற்றார். இதில் செல்லக்குமார் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
இதில் மாவட்ட துணைத்தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட தலைவர்கள் காசிலிங்கம், அக.கிருஷ்ணமூர்த்தி, நாராயணமூர்த்தி, நாஞ்சில் ஜேசுதுரை, ஊத்தங்கரை முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகம், முன்னாள் நகர தலைவர் முபாரக் உள்ளிட்ட ஏராளமனோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
பர்கூர்-ஓசூர்
இதே போல் பர்கூர் தாசில்தார் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். இதில் செல்லக்குமார் எம்.பி. பங்கேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் ஆறுமுகம், மாவட்ட துணை தலைவர்கள் சேகர், ஜெயபிரகாஷ், விவேகானந்தன், முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓசூரில் ரெயில் நிலையம் முன்பு மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் செயலாளர் வீர.முனிராஜ், மாவட்ட பொருளாளர் மகாதேவன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ், ஐ.என்.டி.யு.சி. நிர்வாகிகள் ராஜீ, காளிமுத்து, நாராயணன், வெள்ளைச்சாமி, முத்தப்பா, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயல் தலைவர் அசேன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் சரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துர் ரகுமான் தலைமை தாங்கினார். நகர தலைவர் பால்ராஜ் வரவேற்று பேசினார். மாநில செயலாளர் தேன்கு அன்வர், மாவட்ட துணைத்தலைவர் சபியுல்லா, தாஸ், சீனிவாசன், வேணுகோபால், பர்கத், அன்னைய்யா ரெட்டி முகம்மது, சேசுராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.