வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x

தர்மபுரி கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி

தர்மபுரி வக்கீல்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் பாலு தலைமை தாங்கினார். செயலாளர் தர்மன் முன்னிலை வகித்தார். மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள கேண்டீனை உடனே திறக்க வேண்டும். அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வக்கீல்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் தலைவர் அப்புனு கவுண்டர், சங்க துணை தலைவர் குமரேசன், சங்க இணை செயலாளர் குமார் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் கடந்த ஒரு வாரமாக கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து காலவரையற்ற கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story