ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் எதிரில், மாவட்ட இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஈஸ்வரபாபு, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிவா வரவேற்றார். இதில், மாவட்ட பொருளாளர் மணிவண்ணன், மாவட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மகளிர் பிரிவு செயலாளர் ஈஸ்வரி, தமிழ்நாடு அரசு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் நாராயணன், மாநில தணிக்கையாளர் ராமமூர்த்தி ஆகியோர் பங்கேற்று பேசினர். முடிவில் மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் நன்றி கூறினார். இதில் அனைத்து சங்க வருவாய் மாவட்ட, கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக அரசு ஊழியர்களுக்கு தேர்தல் அறிக்கையில் கூறியப்படி, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.