வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

தர்மபுரியில் வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி


தர்மபுரி தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ஜெயவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரேகா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் புகழேந்தி, காவேரி, இளவேனில் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். தோட்டக்கலைத்துறை அமைச்சு பணியாளர்களின் இடமாறுதலில் அரசின் விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கவேண்டும். இது தொடர்பாக உரிய கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். இடமாறுதலில் விதிமுறை மீறல்கள் தொடர்பான புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சு பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story