தர்மபுரியில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

மின் கட்டணம், ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து தர்மபுரியில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மின் கட்டண உயர்வு மற்றும் உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் குமார், விஜயசங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில நிர்வாகிகள் மாரிமுத்து, விஜய் வெங்கடேஷ், தம்பி ஜெய்சங்கர், மாவட்ட அவைத்தலைவர்கள் தங்கவேல், உதயகுமார், மாவட்ட பொருளாளர்கள் திருமூர்த்தி, ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சுரேஷ் வரவேற்றார். கட்சியின் அவை தலைவர் டாக்டர் இளங்கோவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மகளிரணி செயலாளர் வானதி, விவசாய அணி மாநில துணைச்செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, மின் கட்டணம் உயர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். ஆவின் பொருட்கள் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் சீனிவாசன், மணிமுனியப்பன், தங்கதுரை, தனபால், நாகராஜ், நகர செயலாளர் தேவதேவன், ஒன்றிய செயலாளர்கள் விக்னேஷ்குமார், சரவணன், ஜம்பேரி, முருகன், ரமேஷ், விஜயகாந்த், முனுசாமி, சேட்ராவ், ராஜேந்திரன், சிவராஜ், கோவிந்தன், ஞானவேல், கோவிந்தராஜ் சரோஜா பெரியசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story