டாஸ்மாக் தொ.மு.ச. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் தொ.மு.ச. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தடங்கம் கிராமத்தில் டாஸ்மாக் தொ.மு.ச. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

தர்மபுரி மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச. தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து தடங்கம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கிடங்கு முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோவிந்தன், மயில்முருகன், முனுசாமி, பவுள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில நிர்வாகி சமநிதி கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் பாராளுமன்றத்தில் இருந்து தொ.மு.ச. தொழிற்சங்க அகில இந்திய பொதுச் செயலாளர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை இடைநீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story