மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

தேன்கனிக்கோட்டை, ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை, ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தேன்கனிக்கோட்டை தபால் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தளி ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்த மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அதேபோல் அஞ்செட்டியில் வட்ட செயலாளர் தேவராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஓசூர்

இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஓசூரில் எம்.ஜி. ரோடு காந்தி சிலையருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜா ரெட்டி முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் நிர்வாகிகள் ராஜூ, மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.


Next Story