தர்மபுரியில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி தர்மபுரியில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. சார்பில் போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் வரவேற்றார். மாநில துணைத்தலைவர்கள் பாடி செல்வம், சாந்தமூர்த்தி, முன்னாள் எம்.பி. பாரிமோகன், உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி, இளைஞர் சங்க மாநில செயலாளர் முருகசாமி, வன்னியர் சங்க மாநில செயலாளர் அரசாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம், மாவட்ட தலைவர்கள் செல்வகுமார், இமயவர்மன், மாவட்ட துணை செயலாளர் காமராஜ், தொகுதி அமைப்பு தலைவர் மணி, மாநில அமைப்பு துணைத்தலைவர் வாசு நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் கவுரவதலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

தமிழகம் முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் முன்பு போதை பொருட்கள் கலந்த சாக்லேட், குளிர்பானங்கள் விற்பனை செய்வதை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோசங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பென்னாகரம் ஒன்றியக்குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் பாலகிருஷ்ணன், நாகராஜன், மாவட்ட தலைவர்கள் பாலாஜி, வேலு, இளைஞர் சங்க மாநில துணை செயலாளர் அன்பழகன், மாநில துணைத்தலைவர் சிவகுமார், தொகுதி அமைப்பு செயலாளர் சுதா கிருஷ்ணன், பசுமை தாயக மாநில துணை செயலாளர் மாது, மாவட்ட செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் சக்தி, மணி, சிலம்பரசன், அன்பு கார்த்திக், ராஜீவ் காந்தி, கிருஷ்ணமூர்த்தி, முருகன், அறிவு, ஒன்றிய தலைவர் வெங்கடேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர்கள் சத்தியமூர்த்தி, வெங்கடேசன் ஆகியோர் நன்றி கூறினர்.


Next Story