சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

தர்மபுரியில் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

தர்மபுரியில் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தர்மபுரி வட்டார தலைவர் ஸ்ரீதேவி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரீனா, மாதம்மாள், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் புகழேந்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் சத்துணவு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பணி நிரந்தரம்

அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு அளிக்கும் பணியை சத்துணவு ஊழியர்கள் செய்து வருகிறார்கள். எனவே காலை உணவு வழங்கும் திட்ட பணியை சுய உதவிக்குழுக்களிடம் வழங்கும் முடிவை கைவிட்டு அந்த பணியை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story