தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருப்பூர் சுடலை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் பிரசாந்த், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய, மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதிகளுக்கும் அவரவர் மக்கள் தொகைக்கேற்ப கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் திருப்பதி, மாவட்ட மகளிரணி செயலாளர் மதுபாலாராஜா. ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் ரங்கசாமி, முன்னாள் நகர செயலாளர்கள் பூபால், சீனிவாசன், மாவட்ட தலைவர் மாது, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் சரவணன், தொழிற்சங்க மாவட்ட தலைவர் தினேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.