சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

கிருஷ்ணகிரியில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ராதா, காந்திமதி, லட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகதாம்பிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் சாந்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், பட்டு வளர்ச்சித்துறை சங்க மாநில பொருளாளர் கல்யாணசுந்தரம், பொதுசுகாதார துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சப்தமோகன், சாலை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் தேவன், மாநில செயலாளர் பெருமாள், மாநில செயற்குழு உறுப்பினர் தினேஷ், மாவட்ட செயலாளர் தேவராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நடராஜன், மாநில துணைத் தலைவர் மஞ்சுளா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் கனகவள்ளி நன்றி கூறினார்.

தர்ணா போராட்டத்தில், தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை அணைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். சத்துணவு மையங்களில், சத்துணவு ஊழியர்களை கொண்டு காலை சிற்றுண்டி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை, காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.


Next Story