அரூாில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்


அரூாில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
x

அரூாில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

அரூர்:

அரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க துணைத்தலைவர் சின்னராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் குமரவேல் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஆனந்தன் வரவேற்றார். இதில், பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி வகிதத்ததை குறைக்க வேண்டும். முகவர்களுக்கு பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும். முகவர் நல நிதி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் சேலம் கோட்ட நிர்வாகிகள் முருகன், தங்கமணி மற்றும் கிளை நிர்வாகிகள், முகவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story