கிருஷ்ணகிரியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

இந்தி திணிப்பை எதிர்த்து கிருஷ்ணகிரியில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

இந்தி திணிப்பை எதிர்த்து கிருஷ்ணகிரியில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் இந்தி திணிப்பையும், ஒரே நுழைவு தேர்வையும் திரும்ப பெற கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிசெல்வம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நவாப் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. பேசுகையில், தமிழ் ஒரு தொன்மையான மொழியாகும். தமிழ் மொழிக்கு எப்போதெல்லாம் இந்தியை திணிக்க முயற்சி செய்கிறார்களோ அப்போதெல்லாம் தி.மு.க. தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறது. இதுவரை 2 முறை இந்தி எதிர்ப்பு போராட்டங்களை கண்டுள்ளோம். அண்ணா, கலைஞர் போன்றவர்கள் இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். தமிழ் மொழியை காப்பதற்காகவும், இந்தி திணிப்பை எதிர்த்தும் தி.மு.க. தொடர்ந்து களம் கண்டு வருகிறது. தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்காக போராடும் ஒரே கட்சி தி.மு.க. தான். இந்தியாவிலேயே தலை சிறந்த முதன்மையான முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் விளங்குகிறார். தமிழ் மொழிக்கு ஒரு பிரச்சினை என்றால் தி.மு.க. தொடர்ந்து போராடும் என்று பேசினார்.

கோஷங்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் செங்குட்டுவன், சுகவனம், மாநில மகளிரணி தலைவர் டாக்டர் காஞ்சனா கமலநாதன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, சந்திரன், மாவட்ட பொருளாளர் கதிரவன்,, நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், பொதுக்குழு உறுப்பினர்கள் அஸ்லாம், பாலன், சாமிநாதன், நாகராசன், கோதண்டன், சித்ரா சந்திரசேகர், ஒன்றிய செயலாளர்கள். நகர செயலாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், இந்தி தணிப்புக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்கள்.


Next Story