மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர்:
ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கிளை செயலாளர் மஞ்சுநாத் தலைமை தாங்கினார். ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் நாகேஷ் பாபு முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநகர செயலாளர் ஜெயராமன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில், கட்சியினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். முடிவில், சீனிவாசன் நன்றி கூறினார்.
ஓசூரில், சாந்தி நகர் ஜான்போஸ்கோ அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளி முன்பு இடிந்து விழுந்துள்ள கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும். பள்ளி முன்பு உடைந்துவிழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.