அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் கைதை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதன்படி கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது நகர செயலாளர் கேசவன் தலைமையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், மாவட்ட கவுன்சிலர் ஜெயாஆஜி, வட்டச்செயலாளர்கள் ஏஜாஸ், சாதிக், கோவிந்தன், நகர துணை செயலாளர் குரு, மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜ், செந்தில், ராஜ்குமார் வேதா, சீனிவாசன், தெய்வானை முருகேசன், தியாகராஜன், ராஜசேகர், மாவட்ட பிரதிநிதி செந்தில், நிர்வாகி நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓசூர்
இதேபோல் ஓசூரில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு நடந்த அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கினார். இதில், மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் சங்க செயலாளர் சென்னகிருஷ்ணன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் நாராயணன், மண்டல தலைவர்கள் ஜெயப்பிரகாஷ், புருஷோத்தமரெட்டி, கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் நடராஜன், பகுதி செயலாளர்கள் அசோகா, பி.ஆர்.வாசுதேவன், ராஜி, மஞ்சுநாத் ஒன்றிய செயலாளர்கள் ஹரீஷ் ரெட்டி, ரவிகுமார், அச்செட்டிப்பள்ளி கூட்டுறவு சங்க தலைவர் கே.சாக்கப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி உள்பட 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு நகர செயலாளர் விமல் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம்.சதீஷ்குமார், மாவட்ட ஆவின் தலைவர் குப்புசாமி, முன்னாள் நகர செயலாளர் வாசுதேவன், மாவட்ட அக்ரோ தலைவர் விக்ரம்குமார், மாவட்ட கவுன்சிலர் சங்கீதா கேசவன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கைதான அனைவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.