நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி அருகே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி
தமிழக சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது, ஆந்திரா மாநில எஸ்.வி.புரம் சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த, 10 மாணவர்கள், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில், தமிழக எல்லையான காளிக்கோவில் சோதனைச்சாவடி பஸ் நிறுத்தம் அருகில், நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாகமங்கலத்தை சேர்ந்த இளையராஜா (வயது25) உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story