ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பத்தூர் மாவட்ட புரட்சிகர இளைஞர் முன்னணி, அம்பேத்கர் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் பிரதாபன் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டம் தெக்குப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் தனியார் அகர்பத்தி நிர்வாகத்தை கண்டித்தும், அங்கு பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. கொத்தடிமைகளாக மிகக் குறைந்த மாத சம்பளம் 200 நாட்களுக்கு மேல் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு போனஸ், பஞ்சப்படி, தேசிய விடுமுறையில் கூலி, வார விடுமுறை கூலி, பி.எப்., இ.எஸ்.ஜ., போன்ற எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை என கூறியும், 2வருடம் பணிபுரிந்த பெண் தொழிலாளர்களுக்கு சம்பளம் நிலுவைத்தொகை, போனஸ் வழங்காமல் வேலையை விட்டு நீக்கம் செய்துள்ளதை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இ்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் வேலு, நேய சுந்தர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.