விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டையில் கொட்டும் மழையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டையில் கொட்டும் மழையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தேன்கனிக்கோட்டை தாலுகாவில் அம்மை நோயால் கால்நடைகள் பாதிக்கப்பட்டன. மேலும் பல கால்நடைகள் இறந்தன. இதனிடையே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தளி வட்டார விவசாய சங்க செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். கெலமங்கலம் வட்டார செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், சாம்ராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஆகியோர் கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இழப்பீடு

ஆர்ப்பாட்டத்தில் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயால் இறந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கால்நடை மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் தளி ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், விவசாய சங்க தளி கமிட்டி தலைவர் சிவப்பா, பொருளாளர் அனுமப்பா, கெலமங்கலம் கமிட்டி தலைவர் ரமேஷ், பொருளாளர் சிவா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story