பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஓசூரில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ம.க. உழவர் பேரியக்கம் சார்பில், ஓசூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ராம் நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் அருண்ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் விசுவநாதன், துணை செயலாளர் வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தர்மபுரி எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, செயலாளர் இல.வேலுச்சாமி ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து பேசினர். இதில், பா.ம.க. மாநில துணைத்தலைவர் தேவராஜன், பா.ம.க. வக்கீல்கள் சமூக நீதி பேரவை தகவல், தொழில்நுட்ப துறையின் மாநில தலைவர் கனல் கதிரவன் மற்றும் பத்தலபள்ளி மொத்த காய்கறி வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் ரங்கநாத், முனி வெங்கடப்பா மற்றும் விவசாயிகள், பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, சேட்டிலைட் டவுன் ரிங் ரோடு திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் மத்திய, மாநில அரசு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.