விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி

ஓசூர்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் மக்களின் அடிப்படை வசதிகளை அதிகாரிகள் செய்ய தவறிவிட்டதாக கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் மாயவன் தலைமை தாங்கினார். ஓசூர் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன், மண்டல செயலாளர் நந்தன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் நிர்வாகிகள் செந்தமிழ், சூரிய வளவன், கிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, உதவி கலெக்டர் சரண்யாவிடம், நிர்வாகிகள் வழங்கினர்.


Next Story