பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஈஸ்வர்பாபு வரவேற்றார். மாநில துணை தலைவர் நரசிம்மன், முன்னாள் மாநில தலைவர் சென்னப்பன், முன்னாள் மாநில சட்ட செயலாளர் நந்தகுமார், முன்னாள் மாவட்ட செயலாளர் அமர்நாத், மாநில தணிக்கையாளர் ராமமூர்த்தி, மாவட்ட தலைமை நிலைய செயலாளர் பிரபாகரன், மாவட்ட சட்ட செயலாளர் திம்மப்பா, செய்தி தொடர்பு செயலாளர் செந்தில்குமார், துணை தலைவர்கள் ஜெயராமன், வெங்கடாசலம், பரந்தராமன், இணை செயலாளர்கள் சின்னசாமி, ஜெயசந்திரன், ரவீந்திரநாத் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை தவிர வேறு பணிகளை வழங்க கூடாது. முடக்கி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை உடனடியாக நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.