ஊராட்சித்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஊராட்சித்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஊராட்சித்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமார் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில்ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட தலைவர் சரவணன், தமிழ்நாடு அரசு மருந்தாளுனர் சங்க மாவட்ட தலைவர் துரை, மாவட்ட செயலாளர் கோபாலகண்ணன், ஊரக வளர்ச்சித்துறை மாநிலத்தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் அனைத்து ஓய்வூதியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

கைவிட வேண்டும்

ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்குநடவடிக்கைகள் மீது துறைரீதியான விசாரணைகளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிக்க வேண்டும். ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் என்ற நடைமுறை முற்றிலும் கைவிட வேண்டும். மாநில மற்றும் மாவட்ட ஓய்வூதியர் குறை தீர்வு கூட்டத்தை சீரான இடைவெளியில் நடத்தி தீர்வு காண வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இளைநிலை பொறியாளர்களுக்கும், உதவி பொறியாளர்களுக்கு இணையான ஊதிய விகிதம் அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story