பா.ஜனதா விவசாய அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


பா.ஜனதா விவசாய அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜனதா விவசாய அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, கிழக்கு மாவட்ட பா.ஜனதா விவசாய அணி சார்பில், பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் கரும்பு, வெல்லம், தேங்காய் வழங்கக்கோரியும், தமிழக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு விவசாய அணி மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தலைவர் சிவபிரகாசம், மாநில செயற்குழு உறுப்பினர் தர்மலிங்கம், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கோவிந்தராஜ், மீசை அர்ச்சுணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு அரசு மூலம் ஆண்டு தோறும் வழங்கி வரும் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக இந்த முறை 1000 ரூபாய் தருவதாக தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக அரசு கடந்த முறையை போலவே பொங்கலுக்கு செங்கரும்பு, வெல்லம் மற்றும் தேங்காயை பொங்கல் பரிசு தொகுப்பில் சேர்த்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிரணி தலைவி விமலா, ஒன்றிய தலைவர்கள் வடிவேலன், ரமேஷ், நகர தலைவர் ரமேஷ், விவசாய அணி பொதுச்செயலாளர் கலைவாணன், விவசாய அணி மாவட்ட செயலாளர் கதிர்வேல், சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர்.


Next Story