ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓசூரில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி
ஓசூர்
ஓசூரில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் எம்.ஜி. ரோட்டில் உள்ள காந்தி சிலையருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில், மாநில விவசாய சங்க துணைத்தலைவர் லகுமய்யா, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மாதையன், ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி நிதிப்பலன்களை உயர்த்த வேண்டும். 240 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளியை நிரந்தரம் செய்ய வேண்டும். ரூ.6 ஆயிரத்துக்கும் குறையாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story