ஓமலூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ஓமலூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்
ஓமலூர்:
ஓமலூர் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஓமலூர் தாலுகா தலைவர் உஷாராணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குணசேகரன், கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை அமல்படுத்த கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.240 கோடியில் இருந்து, இந்த ஆண்டு ரூ.150 கோடியாக நிதி குறைக்கப்பட்டதை கண்டித்தும், கிராமப்புறங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்று வரும் 100 நாள் வேலைத்திட்டத்தில் 30 சதவீதம் நிதி ஒதுக்கீட்டை குறைத்ததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story