அரசு கலைக்கல்லூரி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு கலைக்கல்லூரி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் இல்லாத பணியாளர்களை அரசு கலைக்கல்லூரிகளுக்கு பணி இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி கல்வித்துறை பணியாளர்கள் சங்கம் சார்பில் சேலம் அரசு கலைக்கல்லூரி முன்பு நேற்று மதியம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிதியாளர் கார்த்திக் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் துணைத்தலைவர் அறிவழகன், முரளிதரன், அசோக்குமார் உள்பட கல்லூரி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் இல்லாத பணியாளர்களை வேறு துறைக்கு மாற்றம் செய்வதை கண்டித்தும், அந்த பணி நியமனத்தை திரும்ப பெறக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
Next Story