காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி, ஓசூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி, ஓசூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். நகர தலைவர் முபாரக் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரவர்மா, முன்னாள் ஊராட்சி தலைவர் ஆறுமுக சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் ஜேசு துரைராஜ், மாநில செயலாளர் ஆறுமுகம், முன்னாள் மாவட்டத்தலைவர் அக.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர்கள் ரமேஷ் அர்னால்ட், வின்சென்ட், கவுன்சிலர் விநாயகம், லலித் ஆண்டனி, பர்கூர் நகரத் தலைவர் யுவராஜ், விஜயகுமார், வட்டார தலைவர்கள் நாராயணசாமி, சித்திக், ஜேக்கப் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் விக்னேஷ் பாபு நன்றி கூறினார்.

ஓசூர்

இதேபோன்று ஓசூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். இதில், மாநில செயலாளர்கள் தேன்.கு.அன்வர், வீரமுனிராஜ், மாவட்ட பொருளாளர் மகாதேவன், மாநகர தலைவர் தியாகராஜன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துர் ரகுமான், மாவட்ட துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ், தமிழ்வாணன், மாவட்ட ஓ.பி.சி. பிரிவு தலைவர் குமார், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், எல்.ஐ.சி., பொது நிறுவனத்துக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய அதானியையும், அவருக்கு துணை போனதாக மத்திய பா.ஜ., அரசையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Next Story